அரச துறையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பள கொடுப்பனவை உரிய தினத்தில் செலுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதேபோன்று, அரச துறையின் பதவி நிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை உரிய தினத்திலிருந்து சில தினங்களின் பின்னர் செலுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.