Our Feeds


Wednesday, January 25, 2023

ShortNews Admin

அட்டாளைச்சேனையில் ரிஷாதின் அஇமக வில் இணைந்த முஸ்லிம் காங்கிரஸ் போராளி

 


அஹமட் –


அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வும் உறுதிமொழி பிரகடனமும் நேற்று (24) இரவு அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.


கணக்காய்வு உத்தியோகத்தர் ஏ.ஜி. முபாறக் தலைமையில் நடைபெற் ற இந்த நிகழ்வில், வட்டாரங்களில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் பட்டியல் வேட்பாளர்கள் 05 பேரும் என, மொத்தம் 15 பேர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.


மக்கள் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றவர்களில் ஒருவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் இதன்போது வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.


வேட்பாளர்கள் விபரம் வருமாறு;


சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் (பாலமுனை – மின்ஹாஜ் வட்டாரம்)

ஐ.ஏ. சிறாஜ் (பாலமுனை – அல் ஹிதாயா வட்டாரம்)

ஏ.என்.எம். நவாஸ் (ஒலுவில் – அல் ஹம்றா வட்டாரம்)

எஸ்.எம். நஸ்ரின் (ஒலுவில் – அல் அஸ்ஹர் வட்டாரம்)

எஸ்.எல். முனாஸ் (அட்டாளைச்சேனை – அறபா வட்டாரம்)

ஏ.கே. அமீர் (அட்டாளைச்சேனை – அல் முனீரா வட்டாரம்)

எஸ்.எல். ஜவாஹிர் (அட்டாளைச்சேனை – ஜும்ஆ பள்ளி வட்டாரம்)

எம்.எஸ்.எம். ஜவ்பர் (அட்டாளைச்சேனை – இக்ரஹ் வட்டாரம்)

ஐ.எல்.எம். றபீக் (அட்டாளைச்சேனை – தைக்கா நகர் வட்டாரம்)

ஜே. நிஷாட் (அட்டாளைச்சேனை – புறத்தோட்டம் வட்டாரம்)

பட்டியல் வேட்பாளர்கள்


ஏ. நஜாத் (ஒலுவில்)

எஸ்.எம்.எம். றம்ஸாத் (அட்டாளைச்சேனை – ஆலம்குளம்)

ஜே. அஸாயிம் (அட்டாளைச்சேனை)

ஏ.எல். பவ்சர் (அட்டாளைச்சேனை)

என். அப்துல்லாஹ் (பாலமுனை – உதுமாபுரம்)


இதன்போது, போதைப் பொருளற்ற அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை உருவாக்குவதற்கும்,  ஊழல் மோசடியற்ற வினைத்திறணான அட்டாளைச்சேனை பிரதேச சபை நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கும், அதிகாரப் போட்டியற்ற நாகரீகமான அரசியல் கலாசாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், கட்சியின் தீர்மானங்களுக்கு கட்டுப்பட்டு சமூக உணர்வுடன் செயற்பபடுவதற்கும் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


மு.கா. பிரமுகர் இணைவு


இந்த நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸின் தீவிர செயற்பாட்டாளரும், மு.காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு உறுப்பினருமான ஏ.எச். ஹம்ஸா சனூஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.


அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே. அமீர் – பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.


மேற்படி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »