ஒருசிலர் திருடர்களுக்கு தண்டனை வழங்குவதாக கூறுகின்ற போதும், தண்டனை முறை என்னவென்று கூறவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சுமத்தியுள்ளார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி அதற்கான தண்டனை முறையை முன்வைத்துள்ளதாக அவர் நேற்று (29) குருணாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புகொண்ட அனைவருக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட எவரையும் தப்பிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறினார்.