Our Feeds


Friday, January 27, 2023

ShortNews Admin

பொது நிகழ்வில் கலந்து கொண்டார் கோட்டா: பதவி விலகிய பின்னர், இரண்டாவது சம்பவம்!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொழும்பில் உள்ள இந்திய தூதுவராலயத்தில் நடந்த இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டார்.


கோட்டா பதவி விலகிய பின்னர் கலந்து கொண்ட இரண்டாவது பொது நிகழ்வு இதுவாகும்.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுடன் கோட்டாபய ராஜபக்ஷ உரையாடும் படம் வெளியாகியுள்ளது.


கோட்டாவின் சகோதரரும், முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வுக்கு ராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.


கடந்த ஆண்டு மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.


அதன் பின்னர் அவர் பொது நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமலிருந்து கோட்டா மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மத நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின் மீண்டும் இந்த நிகழ்வில் தான் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »