களுத்துறை பிரதான ஆண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரப் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கச் சென்ற மாணவன் ஒருவனை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தி தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பாடசாலையின் புதிய வகுப்பில் நுழைந்த மாணவனை தாக்கியதாகவும் இதனால் பாதிக்கப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த மாணவன் 24 மணி நேரத்துக்கும் மேலாக சுயநினைவு இல்லாமல் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.