பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பில் மேலும் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபர் 02 கையடக்க தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்று வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களை ஏமாற்றி பணம் தருவதாகக் கூறி சிறுநீரகத்தை பெற்றுக்கொள்வதாக ஐவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (31) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.