பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜேவர்தனவின் யோசனைக்கு இணங்க இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நியமனத்திற்கு மஹேஷ் சேனாநாயக்க உடன்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.