Our Feeds


Thursday, January 26, 2023

SHAHNI RAMEES

மக்களுக்காக கதைப்பவர்களை சிறையில் அடைப்பது வருத்தமளிக்கிறது..!

 



நாட்டின் வரிச்சுமை அதிகரித்து, மின்கட்டணமும் அதிகரித்து,

மக்கள் வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் தவிக்கும் வேளையில், நாட்டின் துன்பப்படும் எளிய மக்களுக்கு ஆதரவாக நிற்கும் மக்களை சிறையில் அடைத்திருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் தெரிவித்தார்.


மின் கட்டண அதிகரிப்பு மற்றும் எரிசக்தி துறையில் ஊழல் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக தாங்கள் எழுந்து நின்று வன்முறையை பயன்படுத்தவில்லை, ஆனால் அரசியலமைப்பு வழங்கிய சுதந்திரமான பேச்சுரிமையை பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.



ஆனந்த பாலித மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகிய இரு தொழிற்சங்க தலைவர்களை பார்வையிடுவதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தி அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்னிறுத்தப்படும் என்றும், அதற்காக அனைத்து ஜனநாயக மற்றும் சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் முன்முயற்சி எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »