அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி சிரெட்ஸ் பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கலிபோர்னியாவில் இந்த மாதத்தில் நடைபெற்ற 4வது துப்பாக்கிச்சூடு இதுவாகும். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் துப்பாக்கிச்சூட்டில் சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.