கிழக்கு ஜெரூசலேமில் யூத வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நெவே யகோவ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர் பயங்கரவாதி என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை செயல்இழக்க செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்குஜெரூசலேமை சேர்ந்த பாலஸ்தீனியரே இந்த தாக்குதலை மேற்கொண்டார் என உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் கடந்த சில வருடங்களில் நாங்கள் எதிர்கொண்ட மோசமான தாக்குதல் இதுவென குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு ஜெரூசலேமில் உள்ள யூதகுடியேற்றவாசிகள் யூதவழிபாட்டுத்தலத்தில் வழிபாடுகளை முடித்துவிட்டு வெளியேறும் தருணத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை மேற்கொண்டவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்டவர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வெள்ளை காரை அதிகாரிகள் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் இந்த தாக்குதலை வரவேற்றுள்ளன எனினும் உரிமை கோரவில்லை.
மேற்கு கரையிலும் காஜா பள்ளத்தாக்கிலும் பாலஸ்தீனியர்கள் இந்த தாக்குதலை வரவேற்றுள்ளனர்.