உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன்
இணைந்து போட்டியிட மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.பிரதேச மட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அந்த பிரதேசங்களிலுள்ள உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களால் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம், நிறுவனங்களுக்கு வேட்புமனுக்கள் கையளிக்கப்படும் என பழனி திகாம்பரம் தெரிவித்தார்.