வெடிகுண்டு மிரட்டலாா் எதென்ஸ் விமான நிலையத்தில் திடீரென தரையிறங்கிய "ரியான் ஏர்" விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை என பிரேசில் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலந்தில் இருந்து வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, விமானம் எதென்ஸ் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு திருப்பி விடப்பட்டது.
குறித்த விமானத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதாகவும் அதில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது விமானத்தில் சுமார் 190 பயணிகள் இருந்ததாகவும், இது தொடர்பான தவறான தகவல் தொடர்பில் போலந்தும் சிறப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.