களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி
நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (14) காலை 7 மணி முதல் 8 மணி வரை இடைநிறுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாப்தா தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளுக்காக 1.1 மில்லியன் லீற்றர் நாப்தாவை மாத்திரமே வழங்கியுள்ளதாவும் இது நாளை காலை வரையே போதுமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதை தவிர்க்க, 5.35 மில்லியன் லிட்டர் நாப்தா தேவை உள்ளதாகவும் அதை வழங்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.