பாராளுமன்றத்துக்கு அண்மையில் கிம்புலாவல பிரதேசத்தில் தியவன்னா ஓயாவுக்குள் படகொன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். ஏனைய மூவரும் கரைக்கு நீந்திவந்து தப்பிவிட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தியவன்னா ஓயாவில் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கு உள்ளேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இன்று (26) அதிகாலை இடம் பெற்ற இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.