தடைப்பட்டியலில் ராஜபக்ச சகோதரர்களை சேர்க்கவேண்டும் என கனடாவின் பிரதமரின் அலுவலகம் வேண்டுகோள் விடுத்தது என தகவல்கள் வெளியாகியுள்ளள.
கனடா பிரதமரின் அலுவலகத்தின் வற்புறுத்தலின் பேரிலேயே ராஜபக்ச சகோதாரர்களின் பெயர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டன என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மாத்திரமின்றி அதற்கு தலைமை வழங்கியவர்களும் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை கனடா பிரதமர் அலுவலகம் கொண்டிருந்தது இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.