Our Feeds


Saturday, January 28, 2023

News Editor

அம்பலாந்தோட்டையில் தம்பதியினர் வெட்டிக் கொலை


 அம்பலாந்தோட்டையில் வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்

அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட உறவினர் ஒருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர்.

குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சில காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »