தேர்தல் கடமைகளுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு போதிய எரிபொருள் இல்லாததால், பல மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் கனிய எண்ணெய் கூட்டுத்தாபன அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வரவழைக்கப்பட்டு தேர்தலுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தேர்தல் ஆணைக்குழு கோரியபடி எரிபொருளை வெளியிட முடியாது என கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.