Our Feeds


Sunday, January 8, 2023

ShortNews Admin

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றம் செய்ய தீர்மானம்?



கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக கோட்டே பிரதேசத்தில் புதிய ஜனாதிபதி மாளிகையை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பல விசேட இடங்களை பயன்படுத்த தீர்மானித்ததன் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கோட்டே பிரதேசத்தில் ஜனாதிபதி மாளிகையை நிறுவவும், தற்போது கொம்பனித் வீதியில் உள்ள விமானப்படை தலைமையகத்திற்கு பொலிஸ் தலைமையகத்தை கொண்டு வரவும், வெளிவிவகார அமைச்சினை வேறு இடத்திற்கு மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு, இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »