வீட்டுப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்காக முதன்முறையாக வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நெறியை நீடிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள NVQ நிலை 3 உடன் 15 நாள் பயிற்சி நெறி 28 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 25 நாட்கள் கோட்பாட்டு மற்றும் நடைமுறை பயிற்சி வழங்கப்படும், மேலும் 3 நாட்கள் தேசிய தொழில்முறை தகுதி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும்.
இது தவிர, ஏப்ரல் 1, 2023 முதல், ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டெண்ட் பதவிக்கு வெளிநாடு செல்லும் பெண்கள், பணியகப் பயிற்சியுடன் கூடிய உயர் மதிப்புடைய NVQ 3 சான்றிதழுடன் பணியகப் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுவரை பணியகப் பயிற்சி பெற்ற பெண்களுக்கும் 2023 ஜனவரி 31 அல்லது அதற்கு முன் பயிற்சியை முடித்த பெண்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தாது என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச தரத்திற்கு ஏற்ப நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான பயிற்சி வகுப்புகளின் தரத்தை அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.