நுவரெலியா – தலவாக்கலை வீதியின் நானுஓய, ரதெல்ல குறுக்கு வீதியை இன்று (21) முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓய பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் நேற்று (20) இரவு பஸ்ஸொன்று, வான் மற்றும் ஓட்டோவுடன் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தை அடுத்தே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று பாதையாக டெஸ்போர்ட் ஊடாக சுற்றுவட்ட வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.