குருணாகல், பொத்துஹெரவில் நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றும் நடவடிக்கை இன்று (8) காலை ஆரம்பமாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதுடன் இதனை அகற்றுமாறு அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க தேரர்கள் உட்பட பல தரப்பினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
நேற்று குறித்த இடத்துக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றுமாறு அதன் ஸ்தாபகர் ஜனக சேனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதேவேளை, நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.