பல வருடங்களாக மூடப்பட்டிருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலையின் களஞ்சியசாலையை உடைத்து முச்சக்கர வண்டியில் பித்தளை குழாய்கள் மற்றும் செப்பு பாகங்களை எடுத்துச் சென்ற மூவர் சீனிபுர இலக்கம் 01 தடையில் கைது செய்யப்பட்டதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சீனி தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிப்பவர்கள் எனவும், இவர்களுக்கு சீனி தொழிற்சாலையின் பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவு கிடைக்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட அனைத்து உபகரணங்களும் புத்தம் புதிய பயன்படுத்தப்படாத பித்தளை குழாய்கள், செப்பு குழாய்கள் போன்றவை என்றும், அவற்றில் வரிசை எண்கள் கொண்ட குறிச்சொற்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.