வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி, நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த குற்றச்சாட்டில், சில மணித்தியாலங்கள் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்காக, தவிசாளர் நிமல் அதிகாரியை – நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக் கூண்டுக்குள் அடைத்து வைக்க, பொலன்னறுவை நீதவான் எம்.எம். பாத்திமா உத்தரவிட்டதாக லங்காதீப தெரிவித்துள்ளது.
தனது பிரதேச சபையின் மின்சார ஊழியர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு – விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தவிசாளர் நிமல் அதிகாரி நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
ருஹுனுகெத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெறமை தொடர்பில், இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மூன்று மணிநேரம் கூண்டில் அடைக்கப்பட்ட பின்னர், அவரை எச்சரித்து நீதவான் விடுவிக்க உத்தரவிட்டார்.
நன்றி: புதிது