அமைச்சர் மஹிந்த அமரவீர, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தான் விவசாய அமைச்சை மாத்திரம் தன்வசம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
புதிய அமைச்சர்கள் சிலரை ஜனாதிபதி இன்று நியமிக்கவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.