கொழும்பு பேர வாவியை இலவசமாக சுத்தப்படுத்தி, அழகுபடுத்தும் திட்டத்தை ஜப்பானிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மற்றும் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இடையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான இந்த திட்டம், தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.