ஊடக சுதந்திரம் இல்லாவிட்டால் நாட்டில் ஜனநாயகம் நிலவாது என முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட தாக்குதலிற்குள்ளான பத்திரிiகாயாளர்களை நினைவுகூறும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயக சமூகத்தில் சில உரிமைகளை சிலவேளைகளில் மட்டுப்படுத்தலாம் ஆனால் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டில் சுதந்திரம் இல்லாவிட்டால் ஜனநாயகம் நிலவாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இரண்டுநூற்றாண்டு பாரம்பரியத்தை கொண்ட முற்போக்கான ஊடக கலாச்சாரத்தை கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை கறுப்புவரலாறும் உள்ளது சகிக்க முடியாத துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன,என தெரிவித்துள்ள கருஜெயசூர்ய கடந்த சில தசாப்தங்கள் மிகவும் இருள்மிகுந்தவையாக காணப்பட்டன இந்த யுகத்தில் பத்திரிகையாளர்கள் கடத்தப்பட்டனர் கொல்லப்பட்டனர் பழிவாங்கப்பட்டனர்என தெரிவித்துள்ளார்.