ஹெரோயின் போதைப் பொருளுடன் பல நாள் மீன்பிடிக் கப்பல் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மிரிஸ்ஸ பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீன்பிடிக்கப்பல் போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து அதனை முற்றுகையிட்ட கடற்படை மீன்பிடி கப்பலை பேருவளை மீன்பிடித் துறைமுகம் அருகே கொண்டுவந்து சோதனைகளை நடத்துவதாக தெரிவிக்கப்படுகிறது