இணையவழி (Online) முறை ஊடாக இலங்கை மின்சார சபையின் மின்கட்டணம் செலுத்தும் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்து.
அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்களுக்கு கட்டணங்களை செலுத்த முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.