கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றியதைப் போல், ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து வெளியேற்ற முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவை மூளையை பயன்படுத்தியே வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்ஸ பயன்படுத்தாத சகல சூழ்ச்சிகளையும் சதிகளையும் தற்போதைய ஜனாதிபதி பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஜனவரி மாத இறுதிக்குள் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் அதிகரிக்கும் எனவும், மக்கள் வீதிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.