யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு அவருடைய தாயார் தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்களின் பங்கேற்போடு கடந்த 18ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது.
போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூடத்தில் நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்று மைல்கல் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.