இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவானது இது தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அநுருத்த தெரிவித்துள்ளார்.
இதற்கு ஏதுவாக மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த மின்சார வாகனங்களை பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.