உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சி இன்று (13) கட்டுப்பணம் செலுத்தியது.
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள சூரவீர உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சென்று கட்டுப்பணம் செலுத்தினர்.
நுவரெலியா மாநகரசபை, தலவாக்கலை - லிந்துலை நகர சபை, ஹட்டன் - டிக்கோயா நகரசபை மற்றும் 9 பிரதேச சபைகளுக்கே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
(எஸ்.கணேசன்)