தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருபோதும் பிரியவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்றும் சம்பந்தர் ஐயாவே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது என்றால் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் ஆகியோர் அதனை பகிரங்கமாக வெளியிடட்டும் சம்பந்தர் ஐயாவினை நாங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லையென்று என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி எதிர்வரும் 75 வது சுதந்திர தினத்திற்கும் முன்பு தமிழ் மக்களுடைய நிரந்தமான அரசியல் தீர்வை பற்றி ஒரு முடிவு காணலாம் என கூறுகின்றார் ஆனால் அது தொடர்பான முன்னேற்றமான செயற்பாடுகளை நாங்கள் அவதானிக்க கூடியதாக இல்லை.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலேயே ஜனாதிபதி சந்தித்த எதிர்ப்பு வெறும் டிரைலர்(வசயடைழச) மாத்திரமே அதாவது படத்தின் ஆரம்ப விடயங்கள் மிகுதி விடயங்களை எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதிக்கு பிற்பாடு தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என மக்கள் உணர்ந்தால் மிகுதி படத்தையும் நாங்கள் ஜனாதிபதி அவருக்கு காட்டக் கூடியதாக இருக்கும் அதற்கான திரைக்கதை, வசனம் அனைத்தும் தயார்படுத்துதல் நிலையில் இருக்கின்றது.
இவற்றினை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் அதற்கு முன்பாக அவர் தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை தொடர்பாக ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும் அவருடைய மட்டக்களப்பு மாவட்ட வருகை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் ஏனெனில் மட்டக்களப்பில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இங்கு கூற விரும்புகிறேன்.
உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சகல ஆயத்தங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நாங்கள் இறுதிக்கட்டத்தை வந்திருக்கின்றோம். எங்களுக்கு பல வட்டாரங்களில் பாதிய சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறது ஒருவரை தான் நாங்கள் நிறுத்தலாம் ஆனால் 6, 7 என அதிகமான விண்ணப்பங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.
இம்முறை பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அனைத்து இடங்களிலுமே நாங்கள் சமனான பங்குகளை செய்வதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றோம் இதிலே குறிப்பாக சொல்ல வேண்டிய விடயம் ஜனாதிபதி அவர்களுக்கு நாங்கள் வீதியிலே இறங்கி ஒரு பாடம் படிப்பிக்கிறதை போன்று ஜனநாயக வழியிலும் ஜனாதிபதிக்கு செய்தியினை நாங்கள் சொல்ல வேண்டும்.
நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு விதியில இறங்கிய ஒரு எதிர்ப்பு அல்லது தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை தொடர்ந்து அரசாங்கங்கள் புறக்கணித்ததன் தொடர்பாக எங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தாலும் கூட ஜனநாயக வழியிலும் அதை தெரிவிக்கின்ற ஒரு வாய்ப்பு எதிர்வரும் இந்த உள்ளூராட்சி சபையில் தேர்தலில் வரும்.
இலங்கையிலே தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களுடைய எதிர்காலத்துக்காகவும் தமிழ் பேசும் மக்களுடைய நலனுக்காகவும் 1949 ஆம் ஆண்டில் இருந்து செயற்பாட்டு கொண்டிருக்கும் இலங்கை தமிழரசு கட்சியினுடைய வீட்டு சின்னத்திற்கு வடக்கு கிழக்கு வாழுமாக்கள் அனைவரும் வாக்களிப்பதின் ஊடாக ஜனநாயக வழியிலே நாங்கள் ஜனாதிபதிக்கு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை எவ்வாறு இருக்கின்ற செய்தியை நாங்கள் சொல்ல முடியும்.
எங்களுடைய சமஸ்தி முறையிலே நிரந்தரமான அரசியல் தீர்வை நாங்கள் அடைய வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்ற வேளையில் அதை 1949 ஆம் ஆண்டில் இருந்து வலியுறுத்திக் கொண்டு வரும் தமிழரசுக் கட்சியினுடைய வீட்டு சின்னத்துக்கு வாக்களிப்பதனூடாக அதை நாங்கள் செய்யக்கூடியதாக இருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட வீட்டு சின்னத்தை விட கூடுதலான வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கு கிடைத்தது அதாவது மணி, பூனை, சைக்கிள், படகு, மொட்டு என வாக்குகள் இடப்பட்டது இம்முறை நிச்சயமாக எங்களுடைய மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வீட்டுக்கு சின்னத்துக்கு வாக்களிப்பது தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நாங்கள் எங்களுக்கான சமஸ்டி முறையான தீர்வை நோக்கி போகிறோம் என்பதற்கான ஒரு மக்கள் கொடுக்கும் ஒரு ஆணையாக தான் இருக்கும்.
கடந்த காலத்தில் ஒரு சில சபைகளில் சில வட்டாரங்களில் நாங்கள் தோல்வியடைந்தாலும் கூட மக்கள் இறுக்கமான ஒரு முடிவை வைத்திருக்க வேண்டும் கடந்த காலத்தில் உண்மையிலேயே நீங்கள் ஒரு சிலர் எடுத்த முடிவுகளினால் இன்று எங்களுடைய மாவட்டத்தில் இருக்கின்ற மண்வளங்கள் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றது.
வாகரை பிரதேசத்தை குறிப்பாக எடுத்தால் அங்கு மீன்வளர்ப்பு திட்டங்கள் போன்ற விடயங்களை கொண்டு வந்து அந்த பிரதேசத்திலே வாழும் மக்களுக்கான வாழ்வாதாரத்தை அழித்து தங்களுடைய அரசியல் அல்ல கைகளுக்கு வருமானம் ஏற்படுத்தும் வகையான செயல்பாடுகளை செய்த கட்சிகளை மக்கள் நிராகரிப்பதற்கான சரியான சந்தர்ப்பம்.
ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் கிராம மட்டத்தில் மக்களுக்கு கிடைத்த நியாயமாக சரியான தெரிவை கிராம சேவைகள் போன்ற செய்தவர்களை தங்களுடைய ஆதரவாளர்களுக்கு கொடுத்து மக்களுக்கான அந்த ஒழுங்கான மக்களுக்கு கிடைக்க வேண்டிய வரப்பிரசாதங்களை அழித்தவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய ஒரு நேரம் வந்திருக்கின்றது.
அதேபோன்று கிழக்கை முழுக்க போறோம் என வந்தவர்கள் மக்களை முழுமையாக ஏமாற்றி இருக்கின்றார்கள் மக்கள் சரியான பாடத்தை படிப்பிக்க வேண்டிய தருணம் அமைந்திருக்கின்றது.
கடந்த காலங்களில் ஜனாதிபதி நாட பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இருப்பது என சுமந்திரன் கூறியிருந்தாலும் நேற்றைய தினம் ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயம் பிற்பாடு பூரண நம்பிக்கை இல்லா தன்மை இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கின்றார் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
எமது ஊடகப்பேச்சாளர் கூறிய முதலாவது விடயம் எமக்கு இந்த விடயத்திலே ஜனாதிபதி அவர்களுடைய செயல்பாடுகள் தொடர்பாக எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதனை முதலாவது கூறினார் இருந்தாலும் ஒரு நாட்டினுடைய ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பொழுது நாங்கள் தான் அதற்கு பேச்சுவார்த்தைக்கு கலந்து கொள்ளாமல் இதுக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றோம் நாங்கள்தான் குழப்பவாதிகள் நாங்கள் தான் எங்களுடைய மக்களுடைய பிரச்சனைக்கு தீர்க்கதற்கு ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதனை நாங்கள் சர்வதேசரீதியாகவும் அந்த செய்தி போகக்கூடாது என்பதற்காக நாங்கள் நம்பிக்கையுடன் இந்த பேச்சுவார்த்தையில் இணங்கி இருக்கின்றோம்.
ஜனாதிபதி அவர்கள் இந்த எங்களுடைய தீர்வை தருவதற்கு அவர்கள் எந்த அளவு வாய்ப்பு இருக்கும் என்பதனை சந்தேகமாக இருந்தாலும் நாங்கள் குழப்பவாதிகள் இல்லை என்பதற்காகத் தான் நாங்கள் பேச்சுவார்த்தையிலே ஈடுபடுவோம் என்று கூறினாலும் அதேபோன்றுதான் வரவு செலவுத் திட்டத்திலேயே கடந்து கடைசி வாக்கெடுப்பிலே நாங்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கான காரணமும்.
நம்பிக்கை இருக்கு நம்பிக்கை இல்லை என நாங்கள் கூறவில்லை நம்பிக்கை இல்லை ஆனால் அவர் அதை சர்வதேசரீதியாக எங்களைப் பார்த்து நாளைக்கு ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு போகும் பொழுது நீங்கள் ஏன் குழப்பினீர்கள் என கேள்வி வரக்கூடாது என்பதற்காக நாங்கள் நம்பிக்கையோடு போகின்றோம் என்று தான் நாங்கள் கூறினோம்.
தொழில் ரீதியாக தேர்தலை முகம் கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருப்பதாக கூறுகின்றீர்கள் அதை வழியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் உங்கள் இருவர்மீதும் பாரிய குற்றச்சாட்டு முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அதாவது நீங்கள் தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிளவுக்கு காரணம் எனக் கூறினார்கள்? இது தொடர்பாக இணைபிய போது பின்னர் மார்க்கத்தை தெரிவித்தார். பொதுவாக நல்லதுகள் நடந்தால் நாங்கள் தான் பொறுப்பு கெட்டது நடந்தால் அதற்கு ஒரு சிலர்தான் பொறுப்பு என்பது வளமை தலைமைத்துவம் என்பது நாங்கள் சவாலான விடயங்களை எங்களுடைய மக்களுக்கு தெளிவுபடுத்தி சவாலான விடயங்களை எங்களுடைய மக்களுடைய நலனுக்காக நாங்கள் முகம் கொடுப்பதுதான் தலைமைத்துவம். எங்களுடைய மாவட்டத்திலும் கூட சில இடங்களில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொழுது சில சவாலான நிலைமைகள் வந்திருக்கின்றது. ஆனால் அந்த சவாலுக்கு பயந்து நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறாமல் ஏதோ ஒரு தரப்பு கோவிக்க தான் போகின்றார்கள் அந்த முடிவை எடுக்கின்றது தான் ஒரு திறமையான தலைமைத்துவம் அதை நான் செய்வதற்கு பயப்படுவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் ஒருநாளும் பிரியவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இன்றும் சம்பந்தன் ஐயா தான் அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து விட்டது என்று சொன்னால் உண்மையிலேயே செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் அவர்கள் அதை வெளியிடட்டும் சம்பந்தன் ஐயாவை நாங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என. அவர்களுக்குள்ளே ஐந்து கட்சிகள் ஆறு கட்சிகள் என இணைந்தார்கள் அதிலும் முதலாவது நாளிலே குழப்பங்கள் வந்திருந்தது நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது என்னுடைய நிலைப்பாடு நாங்கள் எங்களுடைய பங்காளி காட்சிகளை ஒருபோதும் விமர்சிக்கப் போவதில்லை அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய விருப்பம். என்னுடைய நிலைப்பாடு நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியுடையதும் பங்காளி கட்சிகளுடைய தொழில்நுட்பு ரீதியாக ஆராய்ந்ததன் அடிப்படையிலே அதிகூடிய ஆசனங்களை நமது பங்காளி கட்சியின் ஊடாகவும் நாங்களும் இணைந்து எடுத்து வடக்கு கிழக்கில் இருக்கும் அனைத்து பிரதேச சபைகளும் நாங்கள் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் அமையும். எங்களுடைய பங்காளி கட்சிகளுக்கு இந்த இடத்திலேயே இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.