பாணந்துறை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மோதரவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வீடு ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் நேற்று (ஜன 17) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மொரட்டுவ நகர சபை தீயணைப்பு பிரிவினர் தீ மேலும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
மோதரவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்ற இனந்தெரியாத சிலர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.