Our Feeds


Wednesday, January 11, 2023

Anonymous

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உயர் பதவிகளுக்கான தேர்தல் விரைவில்

 



இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) இடம்பெற்றது.


தலைவர் பதவிக்கு கௌசல்ய நவரத்னவும், செயலாளர் பதவிக்கு இசுரு பாலபட்டபெந்தியும் வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.


இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டதுடன், வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், வேட்புமனுவை சமர்ப்பித்த இருவரும் போட்டியின்றி அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »