வைத்தியசாலைகளுக்குத் தேவையான முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால், முட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வைத்தியசாலையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விஷேட உணவு வகைகளை வழங்க வேண்டிய நோயாளிகளுக்கும், புரதச்சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நோயாளிகளுக்கும் முட்டை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்யுமாறும், வைத்தியசாலைக்கு முட்டைகளை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.