பேருவளையைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததுடன் தீயை அணைக்கச் சென்ற அவரது கணவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் 28 மற்றும் 24 வயதுடைய தம்பதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (24) பகல் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மனைவி பிளாஸ்டிக் கலனில் காணப்பட்ட மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த இருவரும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் பத்மகுமாரவின் பணிப்புரைக்கமைய, பொலிஸ் பரிசோதகர் கயான் கிரிஷாந்த தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.