Our Feeds


Sunday, January 29, 2023

ShortNews Admin

பல நகரங்களில் காற்று மாசடைதல் அதிகரிப்பு - முகக் கவசம் அணியுமாறு பரிந்துரை!



நாட்டின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.


பல நகரங்களில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளதாக இலங்கை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.


இந்நிலை அடுத்த சில தினங்களிலும் இந்நிலை தொடரலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


இந்த நிலை எதிர்வரும் மார்ச் மாதம் வரை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தொடரலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


வீடுகளிலிருந்து வௌியே செல்லும் சந்தர்ப்பங்களில் முகக்கவசத்தை அணிவதன் மூலம் நச்சு வாயு பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »