அர்மேனியாவில் அஸட் என்ற இடத்தில் செயற்பட்டு வரும் இராணுவ தொழில்நுட்ப தொழிற்சாலை., நேற்று திடீரென. தீ பரவல் ஏற்பட்டது.
இந்த விபத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 15 பேர் சிக்கி உயரிழந்ததோடு மேலும் 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.