மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தில் 30 வயதான தாய், 10 வயதான மகள் மற்றும் 5 வயதான மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அலயபத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.