அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (07) இரவு 10 மணிமுதல் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரையில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.