Our Feeds


Friday, January 27, 2023

ShortNews Admin

அலி சப்ரி - சவூதி வெளிவிவகார அமைச்சர் இடையே முக்கிய சந்திப்பு - அரப் நியுஸ் தகவல்.



உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் அஹமட்டை சந்தித்துள்ளார்.



குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் (26) இடம்பெற்றதாக Arab News இணையத்தளம் தெரிவித்துள்ளது. 


இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் சவூதி அரேபியாவிற்கு இடையேயான பொருளாதார உறவுகள் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் சவூதி அரேபியா இலங்கை மீது அக்கறை கொண்டுள்ளதையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டினார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »