பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்து கமால்குணரட்ணவை நீக்கிவிட்டு முன்னாள் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவை அந்த பதிவிற்கு நியமிக்குமாறு தான் பரிந்துரை செய்யவில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
நான் தற்போதைய பாதுகாப்பு செயலாளரை நீக்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது ஆனால் நான் அவ்வாறான யோசனையை முன்வைக்கவில்லை என ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
யார் இதனை தெரிவித்தது என எதனையும் குறிப்பிடாமல் இந்த செய்தி வெளியாகியுள்ளது இந்த செய்தியை வெளியிட்ட எவரும் இது தொடர்பில் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை நான் தற்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் ஈடுபாடு காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.