Our Feeds


Monday, January 9, 2023

Anonymous

சவூதியின் முதல் பெண் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தர் நியமனம்.

 



சவூதி அரேபியாவின் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அனோத் அல் அஸ்மாரி நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்தாட்ட மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முதலாவது பெண் இவரானார்.


சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தினால் (FIFA - பீபா) கடந்த வாரம் இந்நியமனத்தை வழங்கியது.

சவூதி அரேபியாவின் முதலாவது சர்வதேச  பெண் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக 34 வயதான அல்மாரி கூறியுள்ளார்.

மகளிர் விளையாட்டுத்துறையை சவூதி அரேபியா வேகமாக முன்னேற்றி வருகிறது. 2021 நவம்பரில் பெண்கள் கால்பந்தாட்ட லீக் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது.

அரேபியாவின் முதலாவது பெண்கள் தேசிய கால்பந்தாட்ட கடந்த பெப்ரவரி மாதம் தனது முதல் போட்டியில் விளையாடியது. சீஷெல்ஸ அணியுடனான அப்போட்டியில் 2:0 கோல்களால் சவூதி அரேபியா வென்றமை குறிப்பிடத்தக்கது. சவூதி அரேபிய அணிக்கு ஜேர்மனியின்  முன்னாள் வீராங்கனை மோனிக்கா ஸ்டாப்  பயிற்சி அளித்திருந்தார்.

2026 ஆம் மகளிர் ஆசிய கிண்ண சுற்றுப்போட்டியை தனது நாட்டில் நடத்துவதற்கும் சவூதி அரேபியா விண்ணப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »