பிராந்திய மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு அவற்றை துரிதப்படுத்தும் நோக்கில் சில தினங்களுக்கு முன் புதிய இணையதளம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் இணையதளத்தின் மூலம் மக்களுக்கு பிரதேச சபையினூடாக வழங்கப்படும் சேவைகளை துரிதப்படுத்தவும் தேவையான விண்ணப்பங்கள், அரச தரவுகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். மேலும் இதனூடாக தேவையான தகவல்களையும் பிரதேச சபையில் நடைபெறும் வேலைத் திட்டங்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும்.
எமக்கு இவ் இணையதளத்தினை ஆரம்பிக்க உதவிய MFZ IT Solutions நிறுவனத்திற்கு எமது மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.