ஜனாதிபதியுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கோரி வியாழக்கிழமை (05) மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த போராட்டத்தினை தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் தமிழரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தின் போது தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு மற்றும் இணைந்த வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான சமஸ்டி தீர்வு குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்துகொண்ட பெருமலவிலான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்வேறு ஸ்லோகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில் அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்கள் கல்விமான்கள் மகளிர் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளின் பிரீதி நிதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு மீழப் பெற முடியாத சமஸ்ட்டி தீர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைவு செய்வோம் என்னும் தலைப்புகளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுவின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு பட்ட அமைப்புகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.