Our Feeds


Friday, January 27, 2023

ShortNews Admin

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நினைவுச் சின்னம் மற்றும் குர்ஆன் சிங்கள பிரதி வழங்கிவைப்பு.



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நூற்றாண்டு நிகழ்வை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு உலமா சபையினால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மேலும் திருக் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. 


இந்நிகழ்வு கடந்த 25.01.2023 அன்று  எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் நடைபெற்றது.


குறித்த நிகழ்வில் ஜம்இய்யாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் ரிபா ஷஸன் உட்பட அஷ்-ஷைக் ஹைதர் அலி, அஷ்-ஷைக் நுஸ்ரத் மற்றும் அஷ்-ஷைக் நுஃமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழா நிகழ்வன்று பாராளுமன்றத்தில் மிக முக்கியமான ஓர் அமர்வு இருந்தமையினால் சற்று தாமதமாகி விட்டது எனவும் நிகழ்வுக்கு வரத் தயாரான போது ஏலவே குறித்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த எனது மெய்ப்பாதுகாலவர்கள் நிகழ்ச்சி முடிந்து விட்டதாக எனக்கு அறிவித்தனர். எனவே அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு முடியாமல் போனது என்றும் அதற்கு தான் மிக வருந்துவதாகவும் குறித்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »