ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பைசர் முஸ்தபா அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
தமது பதவி விலகல் கடிதத்தை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இருந்தும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்தும் தாம் விலகியுள்ளதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.