குறைந்த செலவில் பிரமாண்டமாகவும் பெருமையாகவும் சுதந்திர தினத்தை கொண்டாடுவது தொடர்பான முன் கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்துவது அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகார சபைகளின் பொறுப்பாகும் எனவும், அதற்காக தேவையான செலவினங்களை மதிப்பீடு செய்து உண்மையில் செலவு செய்வதாகவும் குறிப்பிட்டார்.
75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காணப்படுவதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கான செலவீனங்களை குறைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுதந்திர தின விழாவை ஒட்டி ஜனவரி 2ம் திகதி முதல் 19ம் திகதி வரை பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி, பாதுகாப்பு வெளிவிவகார, கல்வி, பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள், ஊடகங்கள், நிதி அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திறைசேரி உள்ளிட்ட வரி நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.