Our Feeds


Friday, January 27, 2023

ShortNews Admin

பிரிட்டனில் இரு பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய பின், பெண்ணாக மாறியவர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்



பிரிட்டனில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் பெண்ணாக மாறிய நபரை பெண்கள் சிறையிலிருந்து ஆண்கள் சிறையொன்றுக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.


ஐலா பிரைசன் எனும் இக்கைதி தற்போது பெண்ணாக உள்ளார். எனினும், அவர் ஆணாகப் பிறந்தவர். பின்னர் பாலின மாற்றம் செய்துகொண்டு பெண்ணாக மாறினார். 

அவர் அடம் கிரஹாம் எனும் பெயருடன் ஆணாக இருந்தபோது ஸ்கொட்லாந்தில் இரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்காக காத்திருந்த காலத்தில் ஐலா பிரைசன் பெண்ணாக மாறுவதற்குத் தீர்மானித்தார்.

மேற்படி பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஐலா பிரைசன் குற்றவாளி என கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கான தண்டனை அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து, பெண்கள் சிறைச்சாலையொன்றில் பிரைசன் அடைக்கப்பட்டிருந்தார்.

தற்போது பிரைசன் பெண்ணாக உள்ளபோதிலும், அவர் முன்னர் இரு பெண்களை வல்லுறவுக்கு உட்படுத்தியவர் என்பதால் பெண்கள் சிறையில் அவரை வைத்திருப்பது குறித்து சர்ச்சை எழுந்தது.

பிரைசனை பெண்கள் சிறையில் வைத்திருக்கப் போவதில்லை என ஸஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருந்தார்.

மக்கள் தமது பாலினத்தை சட்டபூர்வமாக மாற்றிக்கொள்வதை இலகுபடுத்தும் சட்டங்களை ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் கடந்த மாதம் நிறைவேற்றியது. எனினும். இம்மாற்றங்கள் எதுவும் பிரைசன் விடயத்துக்கு பொருந்தாது என முதலமைச்சர் ஸ்டர்ஜன் கூறியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »